Tuesday, March 7, 2017

அருமை அவசியம் படிக்கவும்☺


*சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்...*

சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்
இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம்
கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்னஅவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில்
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க
ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில்
ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன் ”5
லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க,மகன்,

அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்
கடனை மாதத் தவனை முறையில் 20
வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான். வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல
வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று,வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய
பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள்என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேந்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல
இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர்,இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.

உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்டநிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்

”இது எல்லாம்உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான்.என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில்பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம்கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும்அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார்.மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.

கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாடவைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில்வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்அப்பாவா?” என்றான்.

ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார்டி சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும்ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின்கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும்நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட்
வரைக்கும். பல வீட்ல கணவன்
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க.அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்கஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதலவராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த
புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்கவந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா?அதனால ஒன்னு அவங்க சொந்தஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்கஅவங்களை முதியோர் இல்லத்தில
சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர்
நின்று கொண்டு இருக்க அவன்
தொடர்ந்து சொன்னான், “

இதோ போறாரே சேகர் சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.
தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.

”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”
”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12
மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல
விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கவே மாட்டிங்களா?”

”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில்
அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லஇருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும்
சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும். கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன்
படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன்
வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.

எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!

*(குறிப்பு; இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்தும்)*

*படிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் அவசியம்*

🍲முளை கட்டிய தானிய உணவும்,மருத்துவ பயன்களும்🍱


🌰ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. 

🌰பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். 

🌰இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். 

🌰இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது. 

🌰முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். 

🌰முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும். 

🌰முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும். 

🌰முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 

🌰முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். 

🌰முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும். 

🌰எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. 

♻உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் பாா்த்து காெள்ளுங்கள்♻

🍀 *இணையப்பகிர்வு*

🍇 திராட்சை 🍇

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில்
ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த்
திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சை பழத்தின் சத்துக்கள்:

நீர் =85%
கொழுப்பு =7%
மாவுப்பொருள் =10%
புரதம் =0.8%
கால்சியம் =0.03%
பாஸ்பரஸ் =0.02%
இரும்புச்சத்து =0.04%
விட்டமின் A =15%
நியாசின் =0.3%

மருத்துவக் குணங்கள்:

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".

திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம்
தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை"டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

"ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது
பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது.

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ
உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்:

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம்,மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.

பளிச் முகத்திற்கு:

தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

வெண்மையான பற்கள்:

திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.

முகச்சுருக்கம் போக்கும்:

திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.